கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு.. யாரெல்லாம் அனுமதி..அமைச்சர் தகவல்..

By Thanalakshmi VFirst Published Apr 10, 2022, 12:08 PM IST
Highlights

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் யாரையும் அனுமதிச் சீட்டு இன்றி போலீஸார் அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரையில் 16 நாட்கள் நடைபெறும் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

சித்திரை திருவிழா முன்னிட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவசர மருத்துவ சிகிச்சையாக சுகாதாரத்துறை சார்பில் 21 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கபட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இதனை தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக நாளை முதல் 16-ம் தேதி வரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வரும் 14 ஆம் தேதி திருக்கல்யாணம், 15-ம் தேதி தேரோட்டம், 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,” அமைச்சர்களோ, நீதித் துறையினரோ யாராக இருந்தாலும் அனுமதிச் சீட்டு இன்றி காவல் துறையினர் அனுமதிக்கக் கூடாது. திருவிழா நடைபெறும் பகுதிகளுக்குள் அனுமதிச் சீட்டு இல்லாத யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பூமிநாதன், வெங்கடேசன், ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், காவல் ஆணையா் செந்தில்குமார், எஸ்பி பாஸ்கரன், கோயில் இணை ஆணையர் செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஏப்ரல் 05 - சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஏப்ரல் 06  – புதன்கிழமை – பூத , அன்ன வாகனம்

ஏப்ரல் 07 - வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் 08  – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு

ஏப்ரல் 09 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் 10 – ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

ஏப்ரல் 11 – திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 12 – செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா

ஏப்ரல் 13 – புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

ஏப்ரல் 14 – வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 

ஏப்ரல் 15 – வெள்ளிக்கிழமை – திருத்தேர் – தேரோட்டம் 

ஏப்ரல் 15 – வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

ஏப்ரல் 16 – சனிக்கிழமை – கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – 1000 பொன்சம்பரத்துடன்

ஏப்ரல் 17 – ஞாயிறுக்கிழமை – திருமலிருந்தசோலை கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , 

பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி 

ஏப்ரல் 18 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்.

ஏப்ரல் 19 – செவ்வாய்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்

click me!