நவராத்திரி முதல் நாள்.. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்.. திரளானோர் தரிசனம்

By Ramya s  |  First Published Oct 16, 2023, 12:29 PM IST

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது நவராத்திரி திருவிழாவாகும். அம்மன் சன்னதியிலுள்ள இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் கொலு அமைக்கப்படும்.

தெற்குப்புற மண்டபம் தீத்தியப்பச்செட்டி என்பவரால் கி.பி.1565-ஆம் ஆண்டு கட்டப்பட்டது என கோவில் வரலாறு கூறுகிறது. நவராத்திரி கொலு காட்சி நடைபெறுவதால் கொலு மண்டபம் என இந்தப் பிரகாரம் அழைக்கப்படுகிறது. நவராத்திரி விழாவின்போது ஒன்பது நாட்களும் அம்மனின் கொலுகாட்சி இந்த மண்டபத்தில்தான் நடைபெறும்.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நவராத்திரி விழா என்பது இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என ஒவ்வொரு சக்திக்கும் மூன்று நாட்கள் என மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும். இந்த விழா திருமலை நாயக்கர் காலத்தில் துவங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. 9 நாட்களும் அம்மன் பல்வேறு விதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருட்காட்சி தருவது வழக்கம். முதல் நாள் ராஜராஜேஸ்வரி, 2-ஆம் நாள் அர்ஜீனனுக்கு பாசுபதம் அருளியது, 3-ஆம் நாள் ஏக பாத மூர்த்தி, 4-ஆம் நாள் கால் மாறி ஆடிய படலம், 5-ஆம் நாள் தபசு காட்சி, 6-ஆம் நாள் ஊஞ்சல், 7-ஆம் நாள் சண்டேசா அனுக்கிரஹ மூர்த்தி, 8-ஆம் நாள் மகிஷாசுரமர்த்தினி, 9-ஆம் நாள் சிவபூஜை என அம்மன் காட்சி அளிப்பார். இதில் மகிஷனை அம்மன் கொன்ற வெற்றி நாள்தான் விஜயதசமியாக 10-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாணவ, மாணவியரின் 108 வீணை வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெறும்.

நவராத்திரி 2023 : தென்னிந்தியாவில் நவராத்திரி எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

நவராத்தி திருவிழாவின் முதல்நாளான இன்று மீனாட்சி அம்மன், ராஜராஜேஸ்வரி திருக்கோலத்தில் காட்சியளித்தார். கொலு மண்டபத்தின் நவராத்திரி கொலுவைக் கண்டு களித்த பக்தர்கள், அம்மனின் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தையும் கண்டு அருளாசி பெற்றுச் சென்றனர். நவராத்திரி விழா நடைபெறும் 10 நாட்களும் பரதநாட்டியம், பக்தி இன்னிசை கச்சேரிகள் நடைபெறும்.

click me!