திருப்பூரில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி உடுமலை பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்நிலையில் உடுமலை அருகே கொழுமம் பகுதியைச் சேர்ந்த கௌதம், மணிகன்டன், முரளி ராஜன் ஆகியோர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் லேசாக மழை பொழிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது எதிர் பாராத விதமாக திடீரென சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இருப்பினும் 3 இளைஞர்களும் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக குமரலிங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் லாரி மோதிய வேகத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்; 3 பேர் உடல் நசுங்கி பலி, சிறுவன் படுகாயம்
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், சமுதாய நலக்கூடம் ஏற்கனவே பயன்பாடற்று, ஆபத்தான நிலையில் தான் இருந்து வந்தது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்ட போது, விரைவில் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்திருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.