ககன்யான் முதல் கட்ட சோதனைக்கு தயார்.! 21ஆம் தேதி விண்ணுக்கு செலுத்த திட்டம்.? - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Published : Oct 16, 2023, 12:08 PM ISTUpdated : Oct 16, 2023, 12:11 PM IST
ககன்யான் முதல் கட்ட சோதனைக்கு தயார்.! 21ஆம் தேதி விண்ணுக்கு செலுத்த திட்டம்.? - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

சுருக்கம்

 குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம்  அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத்  தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம்

தலைமைச் செயலத்தில் இன்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து  சந்திராயன் மூன்று மாதிரி உருவ சிலையை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்னும் இரண்டு ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவு தளம்  பணிகள் முடிவடையும், அதற்காக தமிழக அரசு  2000 ஏக்கர் நிலம் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். தமிழகம் தற்போது பல்வேறு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாகவும், குறிப்பாக விண்வெளி மற்றும் பாதுகாப்பு தளத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளதற்கு முதல்வருக்குநன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

  எளிதாக சிறிய ராக்கெட் செல்லும் 

சென்னை, மதுரை, திருச்சி கோவை உள்ளிட்ட தமிழகத்தை சுற்றியும் தொழில் வழித்தடங்களை தமிழக அரசு அமைத்து வருவதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.  இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா 50 ஆண்டுகள் பழமையானது என்றும் ஏவுகணைகள் ஸ்ரீலங்கா வழியாக செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது.  தற்போது குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் அமைத்தால் எளிதாக சிறிய ராக்கெட்டுகள் செல்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திர கிரி ஏவுதலத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 தயார் நிலையில் ககன்யான்

தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் விண்வெளி மற்றும் பாதுகாப்பிற்காக தயாரிக்கப்படும் இடமாக தமிழகம் விளங்குவது பாராட்டத்துக்குரிய பாராட்டுக்குரியது என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.  ககன் யான் முதல் கட்ட சோதனைக்கு தயார் நிலையில் உள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ககன்யான்  விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் பணி  தொடர்பான பாதுகாப்பு சோதனை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இன்னும் எலக்ட்ரிக் உள்ளிட்ட ஒரு சில சோதனைகள் நடைபெற உள்ளது, இன்றைய நிலவரப்படி வருகின்ற 21ஆம் தேதி வானிலை சீராக இருக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது. வானிலை மற்றும் கடல் சீராக இருக்கும் பட்சத்தில் வரும் 21ஆம் தேதி ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும் என கூறினார்.

பிரக்ஞானந்தாவை சந்தித்த இஸ்ரோ தலைவர்

முன்னதாக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் கூறும்போது, செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவர் உலகின் முதல் நிலை வீரராக வருவதற்கு நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.  பிரக்ஞானந்தா எங்களுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதில் நாங்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நாங்கள் நிலவில் சாதித்ததை இவர் பூமியில் சாதித்து உள்ளது பெருமையாக உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். 

இதையும் படியுங்கள்

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பணி ஆணை முதல் கழிவரை ஒப்பந்தம் வரை.. புகுந்து விளையாடிய KN நேரு.. மொத்த வசூல் ரூ.1020 கோடியாம்
கொங்கு மண்டலத்தில் ஸ்கெட்ச் போட்ட விஜய்.. பீதியில் திமுக, அதிமுக.. டிசம்பரில் சம்பவம் உறுதி.!