
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான களம் சூடு பிடித்துள்ள நிலையில் அவப்பொழுது அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை காவல் கண்காணிப்பாளராக இதுவரை பணிபுரிந்து வந்த திரு. டாங்கிரி பிரவீன் உமேஷ் IPS அவர்கள் இப்பொழுது சிவகங்கை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல இதற்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணி செய்து வந்த பி.கே அரவிந்த் ஐபிஎஸ் அவர்கள் தற்பொழுது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதிய முத்துமாரியம்மன்; நெல்லையில் பரபரப்பு
அதேபோல சென்னை துணை போலீஸ் கமிஷனரான திரு வி ஆர் ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்னைக்குள்ளாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையை இன்று நிறைவு செய்துள்ளார் அண்ணாமலை.
பல்லடத்தில் இன்று நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.