மதுரை அதிமுக மாநாடு சிறப்பு மலர் வெளியீடு; திமுக அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள்!

Published : Aug 20, 2023, 05:26 PM IST
மதுரை அதிமுக மாநாடு சிறப்பு மலர் வெளியீடு; திமுக அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள்!

சுருக்கம்

மதுரை அதிமுக மாநாடு தொடர்பான சிறப்பு மலரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு தொடங்கி  நடைபெற்று வருகிறது.  வலையங்குளத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கான உணவு, குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டை, காலை 8.40 மணி அளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கழக கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். கொடி ஏற்றிய பிறகு, கழகப் பாசறை, அம்மா பேரவை மற்றும் தொண்டரணி அணி வகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர், அருகில் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதில் அதிமுக 50 ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகள் புகைப்படங்களாக வைக்கப்பட்டு உள்ளன. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சியை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி, திறந்த வேனில் மாநாட்டுத் திடலை சுற்றி வந்தார். பின்னர், தான் இருக்கும் ஹோட்டலுக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, இசை நிகழ்ச்சி, கவியரங்கம், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்: கண் கலங்கிய உதயநிதி ஸ்டாலின்!

இந்த நிலையில், மீண்டும் மாலை 4 மணியளவில் மாநாட்டு திடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். அவருக்கு கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், மதுரை அதிமுக மாநாடு சிறப்பு மலரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதையடுத்து, சட்டம் - ஒழுங்கு, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்காதது உள்ளிட்ட திமுக அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்னாமனங்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வைகை செல்வன், செம்மலை ஆகியோர் வாசித்தனர்.

மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக எழுச்சி மாநாட்டின் பிரதான நிகழ்ச்சிகள் மாலையில் தொடங்கியுள்ளன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேர், மதுரை மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் பேசவுள்ளனர். பின்னர், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!