அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோவில்கள்..!அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும்- மதுரை ஆதினம் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Jun 6, 2022, 8:00 AM IST
Highlights

திராவிட பாரம்பரிய என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள், ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள் என மதுரை ஆதினம் விமர்சித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை?

மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றது முதல் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் பங்கெடுத்து தனது கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார். முந்தைய ஆதீனத்தை போலில்லாமல் ஞானசம்பந்த தேசிகரின் பேச்சு அரசியல் கலப்பு நிறைந்ததாகவே இருந்து வருகிறது.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது கஞ்சனூர் கோயிலுக்குள் நுழையக்கூடாது என என்னை மிரட்டுகிறார்கள். என் உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்தாள் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து பாதுகாப்பு கேட்க உள்ளேன் எனவும் அவர் கூறியிருந்தார். இந்தநிலையில் மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாட்டில் இந்து அறநிலையத்துறையும், அரசியல் வாதிகளையும் விமர்சித்து மதுரை ஆதீனம் பேசியுள்ளார். இந்த மாநாட்டில் கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மதுரை ஆதீனம்,  பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என்று பாடியிருப்பார் அதீனங்கள் அரசியல் பேச கூடாது என்கிறார்கள், அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது? அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை அரசியல்வாதிகள் கோவிலில் தர்க்காராக வந்து இருந்து கொள்கிறார்கள். கோவிலுக்குள் அரசியல் புகுந்துவிட்டது ஆன்மீகவாதிகள் ஏன் அரசியல் பேச கூடாது, திருக்கோவில் சொத்துக்கள் தொலைந்து போகிறது  தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரம் திருக்கோவிலுக்குள் உள்ளது நகையை உறுக்குவதாக கூறுகிறார்கள் எங்கு உருக்குகிறார்கள் என தெரியவில்லை

விபூதிக்கு மறுப்பு- ரம்ஜானுக்கு குல்லா

திராவிட பாரம்பரிய என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள் ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள். இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை  பார்க்காதீர்கள், கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என சொல்கிறார்கள் சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது தற்பொழுது சாமி வருவது போல் உண்டியல் வருகிறது இந்து அறநிலையத்துறை கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள், அந்தந்த கோவிலுக்கு செல்வத்தில்லை, உண்டியல் பணம் வேறு எங்கோ செல்கிறது,  திருவாசகத்தை  அரசியல்வாதிகள் திருடிவிட்டார்கள்,  என்னுயிர் தலைவா என்பதை தல என மாற்றி விட்டார்கள். திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் கோவில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும் கோவில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் எடுத்து கொண்டு  குத்தகை கேட்டால் குத்துவதற்கு கை வருகிறது 

கொள்ளை கூராடமாக கோயில்

ஆன்மீகத்தை திருடி கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள்  திராவிடர் என்பதற்கு அர்த்தம் என்ன என  சீமான் கேட்ட கேள்விக்கு தற்பொழுது வரை யாரும் பதில் சொல்லவில்லை கோவில்களில் குத்தகை மற்றும் வாடகை பாக்கி கொடுக்க மறுப்பவர்கள் அடுத்த பிறவியில்  வவ்வாலாக பிறப்பார்கள்-சாபம் அறநிலைய துறை பொல்லாத துறையாக உள்ளது. அறநிலையதுறை அதிகாரிகள் விபூதி பூசுவதில்லை, கோவிலில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக  திருக்கோவில்கள் உள்ளது. அறநிலையத்துறை கலைத்துவிட வேண்டும், கோவில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும். சாமியார்கள் யாசகம் பெற்று  சாப்பிட வேண்டும் என கூறிய சு.வெங்கடேசன் என்னுடன் ஒரு வாரம் தங்கி இருந்தால் சுருண்டு போய் விடுவார். விபூதி பூசுபவர்களாக பிறந்தால் புண்ணியம் கிடைக்கும். இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் பாக்கி வைத்துள்ளது திராவிட கட்சிகள் என பேசினார்.

இதையும் படியுங்கள்

naveen jindal nupur sharma: பாஜக தலைவர்கள் சர்ச்சை பேச்சு: இந்தியப் பொருட்களை புறக்கணிக்க ஓமன் மதகுரு அழைப்பு

click me!