திடீர் உடல்நலக்குறைவு - மதுரை ஆதீனம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

 
Published : Mar 29, 2017, 05:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
திடீர் உடல்நலக்குறைவு - மதுரை ஆதீனம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

சுருக்கம்

madurai adheenam admitted in hospital

பிரபல ஆன்மீகவாதி மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரையை சேர்த்தவர் ஆதினம், இவர் மடாதிபதி பரம்பரையில் 296  வது ஆன்மீகவாதியாக பிறந்தவர். இவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர்.  கடந்த தேர்தலின் போது அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

பிரபல ஆன்மிகவாதியும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தாவை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதினம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் விரைவில் குணமடைய வேண்டி ஆன்மிகவாதிகள் பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!