மதனை விசாரிக்க கூடுதலாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் நியமனம்

Asianet News Tamil  
Published : Nov 25, 2016, 07:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
மதனை விசாரிக்க கூடுதலாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் நியமனம்

சுருக்கம்

வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மே மாதம் மாயமானார். அவர் 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களிடம் ரூ 84 கோடி வரை கையாடல் செய்துவிட்டு பணத்துடன் மாயமானார். இது பற்றி விசாரிக்க பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. 

 மதனை 6 மாத காலமாக தேடி வந்த போலீசார் கடந்த வாரம் திருப்பூரில் கைது செய்தனர். இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட மதனை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மதனை விசாரிப்பதற்காக 2 கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதனை 7 நாள் காவலில் எடுத்து, இன்று மூன்றாவது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதன் மோசடி செய்த பணம் தொடர்பான ஆவணங்கள், மற்றும் சான்றுகளை கண்டுபிடிப்பதற்காக, கூடுதலாக இரண்டு அதிகாரிகள் நியமி த்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

 கூடுதல் ஆணையர் பாலசுப்பிரமணியம், அசோக்குமார் ஆகியோர் மதனிடம் தீவிர விசாரணை நடத்தி, இந்த வழக்கின் விசாரணை அதிகாரி கூடுதல் ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் அறிக்கையை ஒப்படைப்பார்கள் எனத் தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

2026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா?
காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!