மாநகராட்சி வரி வசூல் பணத்தில் கோடிகணக்கில் கள்ள நோட்டுகள் - செய்வதறியாது திகைக்கும் அதிகாரிகள்

First Published Nov 25, 2016, 5:23 PM IST
Highlights


சென்னை மாநாகராட்சி சொத்துவரியாக இதுவரை மிக அளவில் தொகைகள் வந்துள்ளது . இதில் கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகள் இருந்ததால் என்ன செய்வது எனபது தெரியாமல் அதிகாரிகள் திகைத்து போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திட மோடி கடந்த 8 ஆம் தேதி அறிவித்தார் . இதையடுத்து நாடுமுழுதும் பொதுமக்கள் தங்களிடமுள்ள பழை ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மிகுந்த சிரமப்பட்டனர். 

பொதுமக்கள் பிரச்சனையை கருத்தில் கொண்ட  மத்திய அரசு 24 ஆம் தேதி வரை வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றி கொள்ளலாம், மற்றும் சொத்துவரி, தண்ணீர் வரி , மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் பழைய நோட்டுகளை கொண்டே கட்டலாம் என அறிவுறுத்தப்பட்டது. 

இதனால் எந்த தடவையும் இல்லாத அளவுக்கு இந்த முறை மாநகராட்சி சொத்துவரி அதிக அளவில் வசூலானது. பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றவேண்டும் என்ற  ஆர்வத்தில் பழைய நோட்டுக்களை பொதுமக்கள் கொண்டு வந்து சொத்து வரியாக கட்டினர். 

 இதனால் தமிழகம் முழுதும் எந்த முறையும் இல்லாத அளவுக்கு சொத்துவரி வசூலானது. சென்னையில் அதிகபட்சமாக ரூ. 74 கோடி வசூலானது.சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் வசூலான பணத்தை வங்கியில் கட்ட முயன்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. 

அவர்கள் வசூலித்த பணத்தில் 15 மண்டலங்களிலும் கணிசமான அளவுக்கு கள்ளநோட்டுகள் வந்துள்ளது. ஒரு மண்டலத்தில் அதிக பட்சம் ரூ.50 லட்சம் வரை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

click me!