மதன் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் - மேலும் 3 நாட்கள் கஸ்டடி கேட்க முடிவு

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 02:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
மதன் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் - மேலும் 3 நாட்கள்  கஸ்டடி கேட்க முடிவு

சுருக்கம்

வேந்தர் மூவிஸ் மதன் ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்தார். அவரை தீவிர தேடுதலுக்கு பின் போலீசார் கைது செய்தனர். 100 க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ரூ 84 கோடி வரை கையாடல் செய்துவிட்டு பணத்துடன் மாயமானார். இது பற்றி விசாரிக்க பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.

 மதனை 6 மாத காலமாக தேடி வந்த போலீசார் கடந்த வாரம் திருப்பூரில் கைது செய்தனர். இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட மதனை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மதனை விசாரிப்பதற்காக 2 கூடுதல் ஆணையர்கள் கமிஷனர் நியமித்தார். 

பின்னர் மதனை காவலில் எடுத்த போலீசார்  மதன் மோசடி செய்த பணம் தொடர்பான ஆவணங்கள், மற்றும் சான்றுகளை கண்டுபிடிப்பதற்காக,  கூடுதல் ஆணையர் சட்டம் ஒழுங்கு தெற்கு சங்கர் , சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் கிழக்கு மனோகரன் தலைமையில் கூடுதலாக ஒரு துணை ஆணையர் , ஏற்கனவே இருக்கும் மூன்று கூடுதல் துணை ஆணையர்கள் கொண்ட குழு வழக்கை விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார்.  

இந்நிலையில் மதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏராளமான தகவல்கள் வெளியானது. மதனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அம்மா கிரியேஷன்ஸ் சிவா , பாலகுரு , ராமு மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் விநியோகஸ்தர் , தயாரிப்பாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். 

இன்றுடன் மதனின் ஏழு நாள் போலீஸ் காவல் முடிவதால் அவரை நீதிமன்றத்தில் மாலை 5 மணிக்கு ஆஜர் படுத்த உள்ளனர். மதன் கொடுத்த தகவலின் பேரில் மேலும் பல முக்கிய புள்ளிகளை விசாரிக்க வேண்டியிருப்பதால் மதனை மேலும் மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரும் மனுவையும் அப்போது போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

குமரிக்கடல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை போட்டுதாக்கப்போகுது?
விஜய் வைத்த பொறியில் சிக்கிய காங்கிரஸ்... ராகுல் அந்தர் பல்டி? அதிர்ச்சியில் ஸ்டாலின்..!