“அடடா மழைடா அட மழைடா….” மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

First Published Nov 29, 2016, 1:10 PM IST
Highlights


நாளை காலை முதல் குளிர்ந்த காற்று வீசும். மாலையில் இருந்து லேசான மழையாக தொடங்கி, பரவலாக பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தமிழகத்தில் இந்தாண்டு பருவ மழை சரிவர பெய்யவில்லை. தென் தமிழகத்தில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது. இது சராசரியில் 10 சதவீதம் மட்டுமே. வெப்பம் குறைந்து காணப்படுவதால், குளிர்ந்த காற்று வீசுகிறது. நாளை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

காலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசும். மாலையில் மழை பரவலாக மழை பெய்யும். நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்க்கடலில் மீன் பிடித்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக கரை திரும்பவேண்டும்.

பருவ மழை குறைந்துள்ளதால், பனி பொழிவு அதிகமாக உள்ளது. காற்றத்ழுத்த தாழ்வு நிலை, தாழ்வு நிலையாக வலுப்பெற்று வருவதால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!