
உடற்பயிற்சிக் கூடத்தை யார் நடத்துவது என்று தகராறில் அண்ணன், தம்பியை அரிவாளால் சரமாரியாக வெட்விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காரணைபுதுச்சேரி பகுதியில் சகோதரர் இருவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தனர். அண்ணன் துலுக்கானம். தம்பி கோலா.
உடற்பயிற்சி கூடத்தை யார் தொடர்ந்து நடத்துவது என்பதில் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் எல்லை மீறி, இருவரும் மோதிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த அண்ணன் துலுக்கானம், தனது தம்பி என்றும் பாராமல் கோலாவை அறிவாளால் சரமாரியாக தாக்கினார்.
இதில், படுகாயம் அடைந்த தம்பி உயிருக்கு ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், அண்ணன் துலுக்கானம் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.