
பிரதமர் மோடியை கொல்லவும் , தென் இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 4 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். எப்படி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் அவர்கள் இயங்கியது எப்படி என்பது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அல்கொய்தா இயக்கம் அமெரிக்காவால் அன்றைய சோவியத் யூனியனுக்கு எதிராகவும் , சோவியத் ஆதரவு பெற்ற அன்றைய ஆப்கன் அரசுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும். பாகிஸ்தான் மற்றும் ஆப்கனில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பாகும்.
எதற்கும் கவலைப்படாத கொடூர எண்ணங்கொண்ட அமைப்பினர்கள் ஆவர்.
பிற்போக்குதனமாக இஸ்லாமிய சிந்தனைகளை தவறாக புரிந்து கொண்டு அதை வலுக்கட்டாயமாக மக்கள் மேல் திணிக்கும் இந்த அமைப்பின் தலைவராக பின் லேடன் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்காவிற்கு எதிராக இந்த அமைப்பு திரும்பியது.
அமெரிக்காவில் ரெட்டை கோபுரத்தை தகர்த்ததால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஆப்கானிஸ்தானை அழிக்க போர் தொடுத்தது. இதில் அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் பின்லேடன் அழிக்கப்பட்டார். ஆனாலும் இந்த இயக்கம் இன்றும் இயங்கி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் , ஆப்கன் நாடுகளில் தனது கொடூர செயல்களை அரங்கேற்றி வருகிறது.
இந்தியாவிலும் அல்கொய்தா , ஐஎஸைஎஸ் அமைப்பை அமைக்கும் முயற்சியில் இது போன்ற தீவிர எண்ணங்கொண்டவர்களை கண்டெடுத்து தயார்படுத்தும் வேலையில் அல்கொய்தா அமைப்பினர் ஈடு பட்டு வருகின்றனர்.
இவ்வாறு தயார் படுத்தப்படுபவர்கள் மக்களோடு மக்களாக இருப்பபவர்களே. இதனால் லோக்கல் போலீசார் , மற்றும் நுண்ணறிவு போலீசாரால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு கண்டு பிடித்து கைது செய்து வருகிறது.
இதில் அதிகமாக இளைஞர்கள் சிக்குவதும் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு பின்னர் அவர்கள் மூலமே பயங்கரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றுவதும் வாடிக்கை ஆகி வருகிறது.
தென் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக தொடர் குண்டு வைப்பு சம்பவங்கள் அரங்கேறியது. இதில் பலர் கொள்ளப்பட்டனர், காயமடைந்தனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் பல ஆண்டுகளாக தேடி வந்தனர். பல மாநிலங்களில் சல்லடை போட்டு தேடி வந்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் 5 குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் என என்.ஐ.ஏ கருதுகிறது. 1.கடந்த ஏப்ரல் மாதம் சித்தூர் கோர்ட் வளாகத்தில் வாகன நிறுத்துமிடத்தில் குண்டு வெடித்தது. 2. கேரள மாநிலம் கொல்லம் கோர்ட் வளாகத்தில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி குண்டு வெடித்த வழக்கு , 3. கடந்த ஆக.1 அன்று மைசூர் கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வெடித்த வழக்கு , 4. ஆந்திர மாநிலம் நெல்லூரில்
கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி வெடிகுண்டு வழக்கு , 5. கடந்த 1 ஆம் தேதி கேரளா மலப்புரம் குற்றவியல் நீதிமன்ற கழிவரையில் குண்டு வெடித்த வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளில் சம்பந்த குற்றவாளிகளை என்.ஐ.ஏ அமைப்பினர் தேடி வந்தனர்.
இது தவிர மைசூர் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கும் உண்டு. இதில் மைசூர் போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த செப் 20 ஆம் தேதி மேற்கண்ட வழக்கை கையிலெடுத்த தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் அடிப்படைவாத அமைப்பு ( “THE BASE MOVEMENT”) என்ற பெயரில் இயங்கியதும் , அவர்கள் தங்களுக்குள் பென் டிரைவ் , சுற்றறிக்கை மூலம் தகவல் பரிமாறி கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா போலீஸ் உதவியுடன் என்.ஐ.ஏ அமைப்பினர் மதுரையில் 3 பேரையும் சென்னையில் ஒருவரையும் கைது செய்தனர்.
மதுரை முனிச்சாலை இஸ்மாயில் புரத்தை சேர்ந்த நைனார் முகமது என்பவரின் மகன் பெயிண்டர் தொழில் செய்து வரும் அப்பாஸ் அலி (27) என்பவரையும், இவர் தனியாக தாருல் இஸ்லாம் என்ற நூலகத்தையும் நடத்தி வருகிறார்,
2. மதுரை கே.புதூர் விஸ்வநாதா நகரை சேர்ந்த முகமது ஜெய்னுலாப்தீன் என்பவர் மகன் சம்சும் கரீம் ராஜா பி.காம் பட்டதாரியான இவர் தனியாக சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
3.மதுரை ஐலண்ட் நகரை சேர்ந்த முகமது தஸ்லீம் எனபவரின் மகன் , முகமது. அயூப் அலி (25), இவர் காது கேட்பு கருவி கம்பெனியில் அலுவலராக பணியாற்றுகிறார்.
இது தவிர சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மதுரை கரீம்சா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த செய்யது முகமது அப்துல்லா எனபவரின் மகன் சுலைமான் (23) எனபவரை சென்னையில் வைத்தும் கைது செய்தனர். முதல் மூன்று பேரை மதுரையில் கைது செய்த என்.ஐ.ஏ அமைப்பினர் மதுரையில் சென்னை திரும்பிய சுலைமானை சென்னையில் பேருந்திலிருந்து இறங்கும் போதே மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சுலைமான் தான் இந்த குழுவின் தலைவராகவும் மூளையாகவும் செயல்பட்டுள்ளார். இவர் பழைய மஹாபலிபுரம் சாலையில் உள்ள சர்வதேச மென் பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சென்னை தரமணியில் நண்பர்களுடன் தங்கியுள்ள சுலைமான், இவர் வாரவிடுமுறை நாட்களில் மதுரை சென்று ,மற்ற 3 பேரை சந்தித்து வருவாராம். இவர்தான் இந்த இயக்கத்தின் முக்கிய புள்ளியாக தொடர்பாளராக செயல்பட்டு வருகிறார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நவீனரக செல்போன்கள் , ஹார்ட் டிஸ்குகளை என்.ஐ. ஏ அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு டிரான்சிட் ரிமாண்ட் செய்யப்பட்டு பெங்களூர் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இவர்களுக்கும் அல்கொய்தா அமைப்புக்கும் எந்த வகையில் தொடர்பு உள்ளது அல்லது வேறு அமைப்புடன் தொடர்பு உள்ளதா, இவர்களின் நெட்வர்க் என்ன , மதுரை சென்னை தவிர மற்ற நகரங்களிலும் இவர்கள் அமைப்பு உள்ளதா , அமிப்பின் உறுப்பினர்கள் விபரத்தையும் என்.ஐ.ஏ அமைப்பினர் திரட்டி வருகின்றனர்.
சீரியல் பிளாஸ்ட் எனப்படும் தொடர் குண்டு வெடிப்புத்தவிர பிரதமர் மற்றும் முக்கிய விஐபிக்களை குறிவைத்து கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.