7 பேருக்கு பாசிட்டிவ்..! மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் - அமைச்சர்

By Thanalakshmi VFirst Published Dec 5, 2021, 9:46 PM IST
Highlights

புதிய வகை கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவர்களது மாதிரி ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 

புதிய வகை கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவர்களது மாதிரி ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் இதுவரை 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நன்கு நாட்களில்  அமெரிக்கா , இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதித்த 7 பேரில் , 4 பேர் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், நாகர்கோவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தலா ஒருவரும் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் இவர்களில் இங்கிலாந்து இருந்து சென்னை வந்த பெண்ணுக்கு தற்போது கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களுர் வந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 66 வயதுடைய நபருக்கு முதல் முதலாக ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த நபர் நெகட்டிவ் சான்றிதழுடன் துபாய் சென்றுவிட்டு திரும்பிய நிலையில், அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் பெங்களுரில் வெளிநாட்டிற்கு செல்லாத நிலையில், 46 வயதாக மருத்துவர் ஒருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  

இதை தொடர்ந்து நேற்று ஜிம்பாப்வே நாட்டிலிருந்து இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய 72 வயதுடைய நபர் ஒருவருக்கும், அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு திரும்பிய 33 வயதான நபருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இன்று தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் , ராஜஸ்தானிலும் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதியானதால் நாட்டின் ஒமைக்ரான் பாதிப்புடையவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

click me!