சொகுசு வசதியுடன் புழல் சிறை கைதிகள்... 18 டிவிக்கள், ரேடியோக்கள் பறிமுதல் !

By vinoth kumarFirst Published Sep 14, 2018, 12:46 PM IST
Highlights

சொகுசு வசதிகளுடன், புழல் சிறையில் கைதிகள் இருக்கும் போட்டோக்கள் வெளியான நிலையில், சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் 18 டிவிக்கள், எப்.எம். ரேடியோக்கள் உள்ளிட்டவற்றை சிறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சொகுசு வசதிகளுடன், புழல் சிறையில் கைதிகள் இருக்கும் போட்டோக்கள் வெளியான நிலையில், சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் 18 டிவிக்கள், எப்.எம். ரேடியோக்கள் உள்ளிட்டவற்றை சிறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சென்னை புழல் சிறைக்குள் வெளியில் இருந்து போதை பொருட்கள், லக்சுரி பொருட்கள், காசு கொடுக்கப்பட்டால் சிறை கைதிகளுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. 

புழல் சிறையில் 750-க்கு மேற்பட்டோரும், விசாரணை கைதி 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் சிறை துறை அதிகாரி ஒருவர், கஞ்சா போதை பொருள் எடுத்து சென்று மாட்டிக் கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சிறை கைதியாக இருக்கும் பெரும் புள்ளிகளிடம் 
லஞ்சம் பெற்றுக் கொண்டு வசதிகள் செய்யப்படுவதாகவும் தகவல்கள் மட்டுமே வெளி வந்தது. 

இந்தநிலையில், சொகுசு விடுதியில் இருப்பது போன்று பல்வேறு வசதிகள் புழல் சிறையில் செய்து கொடுக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி ஒருவரும், மதுரை கைதிகள் இருவரும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இவர்கள் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளனர். கைதிகளுக்கான ஆடையை அணியாமல், சுற்றுலா செல்வதுபோல் நாகரிக உடைகளை அணிந்தும், காலில் 
ஷூ அணிந்தும் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. 

இதனைத் தொடர்ந்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் சிறையில் ஆய்வு செய்தார்.  இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார்? என்பது குறித்து விசாரிக்கப்படுவார்கள் என்றும் ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா கூறியிருந்தார். இந்த நிலையில் புழல் சிறையில் 24 உயர்மட்ட அறைகளில் டிஐஜி முருகேசன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கைதிகளின் அறைகளில் வைக்கப்பட்டிருந்த 18 டிவிக்கள், எப்.எம். ரேடியோக்கள் 
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

click me!