தி.நகர் சுரங்கப்பாதையில் சிக்கிய சொகுசு பேருந்து! மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தால் பரபரப்பு!

 
Published : Dec 28, 2017, 05:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
தி.நகர் சுரங்கப்பாதையில் சிக்கிய சொகுசு பேருந்து! மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தால் பரபரப்பு!

சுருக்கம்

Luxury bus in TNagar subway

சென்னை, தி.நகர், துரைசாமி சுரங்க பாதையில் இன்று சொகுசு பேருந்து ஒன்று சிக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை மாநகருக்குள் சொகுசு பேருந்துகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சொகுசு பேருந்துகள் மாநகரத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனியார் பேருந்தான சொகுசு பேருந்து, இன்று சென்னை, தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்க பாதையில் நுழைய முற்பட்டுள்ளது. ஆனால், பேருந்து, பாலத்தின்கீழ் சிக்கி கொண்டது. பேருந்தை அகற்ற முயன்றபோது பாலத்தில் விரிசல் எற்பட்டுள்ளது. இதனால், மாநகர போலீசாரும், ஊழியர்களும் பேருந்தை அகற்றுவது குறித்து தீவிரமாக யோசித்து வருகின்றனர். 

துரைசாமி சுரங்க பாலத்தில் சொகுசு பேருந்து சிக்கியுள்ளதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாதாரணமாகவே தி.நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக திக்கி திணறி வருகிறது. இந்த நிலையில் சொகுசு பேருந்து, பாலத்தில் சிக்கியுள்ளதால் மேலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாலத்தின் மேற்கூரையை எடுத்தால் மட்டுமே பேருந்தை வெளியே எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, போக்குவரத்து போலீசாரும், ஊழியர்களும், பேருந்தை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பேருந்தை உடைத்து அகற்றும் பணியில் போலீசாரும், ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!