என்னை ஆணவக்கொலை செய்யப் பாக்குறாங்க... கதறும் இளம்பெண்!

By vinoth kumar  |  First Published Oct 2, 2018, 4:58 PM IST

பெற்றோர், உறவினர்கள் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை ஆணவ கொலை செய்ய முயற்சிப்பதாகவும், கல்லூரி மாணவி ஒருவர் வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பெற்றோர், உறவினர்கள் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை ஆணவ கொலை செய்ய முயற்சிப்பதாகவும், கல்லூரி மாணவி ஒருவர் வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 கன்னியாகுமரி மாவட்டம், கண்ணணூர் பகுதியைச் சேர்ந்த என்ஜினியரிங் மாணவி, சஜ்ஜூ என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, மாணவியை கல்லூரிக்கு செல்வதை தடை செய்துள்ளனர். உறவினர்கள் வீட்டில் மாணவி அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மாணவி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Latest Videos

அந்த வீடியோவில், தனது குடும்பத்தினர், காதலர் சஜ்ஜூவை கொலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், தன்னை உறவினர்களும், பெற்றோரும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும், காதலர் சஜ்ஜூ மீது, பொய் புகார் கூறும்படியும், இல்லை என்றால் தன் மீது ஆசிட் ஊற்றி விடுவதாகவும், கை-கால்களை உடைத்து விடுவதாகவும் உறவினர்கள் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

 சஜ்ஜூவை கொல்ல வேண்டும் என்றும் உறவினர்கள் கூறி வருகிறார்கள். எங்களைக் காப்பாற்றுங்கள் என்றும் என்னால் இங்கு இருக்க முடியாது என்றும் அந்த பெண் வீடியோவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

click me!