மக்களவை தேர்தல்.. தமாகா சார்பாக தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் விஜயசீலன் - ஜி.கே.வாசன் அறிவிப்பு!

Ansgar R |  
Published : Mar 23, 2024, 10:21 PM ISTUpdated : Mar 23, 2024, 10:23 PM IST
மக்களவை தேர்தல்.. தமாகா சார்பாக தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் விஜயசீலன் - ஜி.கே.வாசன் அறிவிப்பு!

சுருக்கம்

Tamil Maalina Congress Candidate : வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தூத்துக்குடி தொகுதியில் விஜய்சீலன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் குறித்த பட்டியலை தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றனர். குறிப்பாக கோவையில் பாஜக சார்பில் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஈரோடு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வேணுகோபால் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல ஈரோட்டில் விஜயகுமார் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. 

அதிமுக எடுத்த ஜெராக்ஸ்... பாஜகவின் அழுகுனி ஆட்டம்... திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

ஆனால் தூத்துக்குடியில் யார் போட்டியிட போகிறார்கள் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், தற்போது தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக விஜய்சீலன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் தூத்துக்குடி தமிழ் மாநில காங்கிரஸின் தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகின்றார். 

தமாகா கோரிக்கை விடுத்ததை அடுத்து, தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

"சிலிண்டர் விலை குறைப்பு.. மக்களிடம் நாடகமாடுகிறார் மோடி' - ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தை துவங்கிய உதயநிதி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?