பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாகச் சாடிப் பேசினார். பிரதமர் மோடி வார்த்தைகளால் வடை சுடுகிறார் என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை எடப்பாடி பழனிச்சாமியின் பம்மாத்து அறிக்கை என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திரூவாரூரில் தனது பரப்புரையைத் தொடங்கியுள்ளார். ஏப்ரல் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். அப்போது, பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாகச் சாடிப் பேசினார். பிரதமர் மோடி வார்த்தைகளால் வடை சுடுகிறார் என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை எடப்பாடி பழனிச்சாமியின் பம்மாத்து அறிக்கை என்றும் சாடினார்.
undefined
மத்திய அரசு குழு வந்து ஆழ்வு செய்தும் வெள்ள பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு பிரதமர் மோடி ஒரு சல்லி காசு கூட நிவாரணமாகத் தரவில்லை என்றும் ஓட்டு கேட்டு மட்டும் தமிழகத்துக்கு வந்து வந்து செல்கிறார் எனவும் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் பன்முகைத்தன்மையும், கூட்டாட்சியும் இருக்காது என்றும் முதல்வர் எச்சரித்தார்
சிம்லா முத்துச்சோழனுக்குப் பதில் ஜான்சி ராணி! நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்!
திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக ஜெராக்ஸ் எடுத்துள்ளது எனவும் அவர் விமர்சித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஆளுநர் மாளிகையில் பொன்முடியின் பதவியேற்பு விழாவில் இருந்தே தனது தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
தமிழக அரசுக்குத் தொல்லை தரும் ஆளுநரை எதிர்த்து ஈபிஎஸ் ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? எனவும் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடியும் எடப்பாடி பழனிசாமியும் தமிழ்நாட்டுக்குச் செய்த துரோகங்களை உணர்ந்து மக்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். நானும் விவசாயிதான் என்று பச்சைத் துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி எனவும் விமர்சித்தார்.
திமுக காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் எனப் போராடியது என்றும் நாட்டுக்கே முன்மாதிரியான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். ஒடுக்கப்பட்ட, ஏழை மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சொந்த வீடு வாங்க வெறும் 84 ரூபாய் இருந்தா போதும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு!