தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜக 5 இடங்களில் வெற்றி பெறும் : India TV-CNX கருத்துக்கணிப்பில் தகவல்..

By Ramya sFirst Published Mar 5, 2024, 9:16 AM IST
Highlights

2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜக 5  நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்று  இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பின்படி, 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜக 5  நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக 5 மக்களவைத் தொகுதிகளையும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1 இடத்தில் வெற்றி பெறும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு திங்கள்கிழமை (மார்ச் 4) கணித்துள்ளது. மேலும் திமுக 20 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய முஸ்லீம் லீக், கொ.ம.தே.க கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியையும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ், விசிக உடனான முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக? கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி.!

மறுபுறம் தேமுதிக உடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், பாஜக தனது தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில்  தற்போது, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது,

அதே பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளை இணைக்க பாஜக முயற்சிக்கிறது. இருப்பினும், இந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜக 5 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துகக்ணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

"நான்தான் மோடியின் குடும்பம்..." 5 நிமிஷத்துல சென்னையை அதிர வைத்த பிரதமர் மோடி!

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019:

மொத்த இடங்கள்: 39

திமுக: 24
காங்கிரஸ்: 08
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: 02
சிபிஐ: 02
அதிமுக: 01
விசிகே: 01
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: 01
பாஜக: 00
பாமக :: 00

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014:

அதிமுக: 37
பாஜக: 01
பாமக: 01
திமுக: 0
காங்கிரஸ்: 0

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிகே), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), இந்திய ஜனநாயக கட்சி (IJK), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) மற்றும் மதிமுக (MDMK) ஆகிய கட்சிகள் இடம்பெற்றது

மற்றொரு பிரதான கட்சியான அதிமுக ,பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!