"நான்தான் மோடியின் குடும்பம்..." 5 நிமிஷத்துல சென்னையை அதிர வைத்த பிரதமர் மோடி!

"யார் யாருமே இல்லாதவர்களோ யார் நிராதரவாக இருக்கிறார்களோ, யார் அநாதைகளோ, அவர்கள் அனைவரும் இந்த மோடியைச் சேர்ந்தவர்கள். மோடி அவர்களுக்குச் சொந்தமானவன்" எனத் தெரிவித்தார்.


சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் நான் மோடியின் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று ஒருமித்த குரலில் கூறுகிறது என்றும் கூறினார். 

கடந்த ஒரு மாதத்தில் 4வது முறையாக சென்னை வந்த பிரதமர் மோடி, இன்று கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில் ஈரணு உலை திட்டத்தை தொடக்கி வைத்தார். பின், சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Latest Videos

"தேசத்தின் விவசாயிகள், தேசத்தின் ஏழை மக்கள் தாம் என் குடும்பச் சொந்தங்கள். அதனால் தான் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க, அவர்களின் உரிமைகளுக்காக நான் என்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறேன். யார் யாருமே இல்லாதவர்களோ யார் நிராதரவாக இருக்கிறார்களோ, யார் அநாதைகளோ, அவர்கள் அனைவரும் இந்த மோடியைச் சேர்ந்தவர்கள். மோடி அவர்களுக்குச் சொந்தமானவன். என்னுடைய பாரதம் தான். என்னுடைய குடும்பம்" எனத் தெரிவித்தார்.

இரட்டைக் குழந்தைகளைப் பார்க்காமல் வந்த தொண்டர்... சென்னையில் பிரதமர் மோடியை நெகிழ வைத்த சந்திப்பு

INDI Alliance- Families First.

Modi- Nation First! pic.twitter.com/cbq2zRpqvm

— Narendra Modi (@narendramodi)

"இன்று தேசம்  முழுவதும் ஒரே குரலெடுத்து நான், மோடியின் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறுகின்றன" எனத் தெரிவித்தார். பின், "என்ன கூறுகிறது?" என்று கூட்டத்தை நோக்கிக் கேள்வி எழுப்பிய அவர், "நான்தான் மோடியின் குடும்பம், நான்தான் மோடியின் குடும்பம்" என்று திரும்பத் திரும்பக் கூறினார்.

"திமுகவும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் குடும்பத்துக்கு முன்னுரிமை என்கின்றன. ஆனால், மோடி சொல்றேன், - தேசத்திற்கே முன்னுரிமை" என்றார். 16 வயதில் தான் குடும்பத்தை விட்டு வெளியேறியது இந்த தேசத்துக்காகவே என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

"இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஊழலில் ஊறிப்போய், குடும்ப அரசியலில் ஈடுபட்டுள்ளன. இன்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பால் அவர்கள் கப்பல் கவிழ்ந்துவிட்டபோது போல சோகத்தில் இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டார்.

சென்னையில் வைஜெயந்தி மாலா, ஹெச்.வி. ஹண்டேவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

click me!