மார்ச் மாதத்தில் உச்சத்தை தொட்ட டாஸ்மாக் மது விற்பனை!

By Manikanda Prabu  |  First Published Apr 3, 2024, 2:11 PM IST

மக்களவைத் தேர்தல், கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. மது வகைகள் மீதான ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

Latest Videos

அதேசமயம், பண்டிகை, விடுமுறை, கோடை காலங்களில் மது விற்பணை அதிகரிப்பது வழக்காமாக உள்ளது. அந்த வகையில், மக்களவைத் தேர்தல், கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டி அரசியல் கட்சிகள் சார்பில் தொண்டர்கள் பிரசாரங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அவர்களுக்கு உணவு உடன் மதுபானங்களும் வழங்கப்படுகின்றன.

நாளை தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா! டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.!

அதேசமயம், கோடை வெயிலும் சுட்டெரித்து வருகிறது. இதனால், கடந்த மார்ச் மாதம் பீர் பாட்டில்களின் விற்பனை 32.72 லட்சம் பெட்டிகளாகவும், மது வகைகளின் விற்பனையும், 55.07 லட்சம் பெட்டிகளாகவும் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பீர் விற்பனை முறையே 24.40 லட்சம், 26.93 லட்சம் பெட்டிகளாகவும் இருந்தது. மது வகைகளின் விற்பனை ஜனவரியில் 57 லட்சம் பெட்டிகளாகவும், பிப்ரவரியில் 47.34 லட்சம் பெட்டிகளாகவும் இருந்தது.

டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக, 60,000 பெட்டி பீர் வகைகள், 1.80 லட்சம் பெட்டிகள் மது வகைகள் விற்பனையாகி வரும் நிலையில், மக்களவைத் தேர்தல், கோடை வெயில் காரணமாக இந்த விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகளின் மொத்த வருவாயும் மார்ச் மாதம் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் மட்டும் பீர் வகைகள் ரூ.621 கோடிக்கும், மது வகைகள் ரூ.3,854 கோடிக்கும் என மொத்தம் ரூ.4,475 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

click me!