பாஜக ஒரு வாஷிங் மெஷின் ஊழல்வாதிகளை கட்சியில் சேர்த்து தூய்மையாக்கிவிடுவார்கள்; பிடிஆர் விமர்சனம்

By Velmurugan s  |  First Published Apr 3, 2024, 12:53 PM IST

ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் பாஜகவுடன் இணைந்த பின்னர் அவர்கள் மீதான வழக்குகளை எல்லாம் வாஷிங் மெஷின் போல பாஜக அரசு அழித்து விடுகிறது என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.


இந்தியா கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலமாசி வீதி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஆவியாகி விடும். பாஜக ஒரு வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது. யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வழக்குகள் எல்லாம் ஆவியாகி விட்டது.

தமிழகத்திற்கான நிதியை கேட்டால் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழைப்பழ கதையை கூறுகிறார்; ஆ.ராசா விமர்சனம்

Tap to resize

Latest Videos

undefined

நாடு முழுவதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 25 கட்சிகள் இப்போது காணாமல் போய்விட்டன. டெல்லி முதலமைச்சரை சிறையில் அடைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதெல்லாம் வென்று விடுவோம் என்ற தில்லோடு இருப்பவர்கள் செய்கிற செயலா இது? பயத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல் இது.

எந்த மூஞ்ச வச்சிகிட்டு ஓட்டு கேட்டு வரீங்க? பாமக வேட்பாளரை கதறவிட்ட சாமானியன் - தஞ்சையில் பரபரப்பு

பணம் மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளார்கள் ஒன்றிய பாஜக. நம்முடைய வரிப்பணத்தை எடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலத்துக்கு கொடுத்துள்ளார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு வளர்ச்சி ஏற்படவில்லை" என பேசினார்.

click me!