ED, IT எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி; ஜெயில கட்டுனதே எங்களுக்காக தான் தம்பி - செல்லூர் ராஜூ

By Velmurugan sFirst Published Apr 2, 2024, 5:00 PM IST
Highlights

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி மாதிரி என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சிறைச்சாலையை கட்டியதே எங்களுக்கா தான் என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை. அமலாக்கத்துறை குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. சிறையே எங்களுக்காக தான் கட்டப்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் வாய்ப்புட்டு சட்டமே எங்களுக்காக தான் கொண்டு வந்தான்.  

இப்ப இல்லை அழகிரி அதிகாரத்தில் இருக்கும்போதே அவருக்கு எதிராக அரசியல் செய்தவன் நான். அழகிரி மிகப் பெரிய ஜாம்பவானாக இருந்தார். மதுரை மீனாட்சி, சொக்கநாதருக்கு மேலாகவே செல்வாக்கு என்பது போல் அழகிரி ஆதரவாளர்கள் துதி பாடினார்கள். ஆனால் தற்போது அவர்கள் எல்லாரும் எங்க இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  பசை இருக்கும் இடத்தை தேடி சென்று விட்டார்கள். இதற்கெல்லாம் பயப்படமாட்டோம்.

கடந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு நீங்கள் செய்தது என்ன? கனிமொழிக்கு நடிகை விந்தியா அடுக்கடுக்கான கேள்வி

தி.மு.க., நல்லது செய்தால் வரவேற்போம். என்ன செய்தார்கள் திமுக. ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் தி.மு.க.,வை நியாயமான முறையில் தான் விமர்சனம் செய்கிறோம்.

"கச்சத்தீவை தாரைவார்த்தது குறித்து ஆர்.டி.ஐ., மூலமாக கண்டறிந்ததாக அண்ணாமலை  தெரிவிக்கிறார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க., தற்போது புதிதாக கண்டறிவது போல பேசுகின்றது. எல்லாம் தெரிந்த மெத்த மேதாவிகள் பேசுகின்ற நபர்களுக்கு தற்போது தான் கச்சத்தீவு குறித்து தெரியுமா? கச்சத்தீவு குறித்து அம்மா அவர்கள் 2006ம் ஆண்டே ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்வேறு எதிர்ப்புகளை முன்னெடுத்தார். மீன் சுவையாக இருக்கிறது, என எல்லை தாண்டி மீன்பிடிக்கும் நபர்களை பூ போட்டா வரவேற்பார்கள்? துப்பாக்கி வைத்து தான் சுடுவார்கள் என கலைஞர் கொச்சையாக பேசினார்கள். 

இதை எல்லாத்தையும் எதிர்த்தவர் அம்மா.  20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை இதையெல்லாம் ஏன் படிக்காமல் விட்டார். மீனவர் பாதிப்பு குறித்து எப்படி தெரியாமல் இருந்தார். கச்சத்தீவை கலைஞர் 1974-ல் தாரைவார்த்தார். ஆனால் இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை இதனை ஆர்.டி.ஐ.,மூலம் தெரிந்துகொண்டேன் என்கிறார்.  மீனவர்கள் பாதிப்பு குறித்து தெரியாமல் இருந்துள்ளார். இதற்கு ஆர்.டி.ஐ தான் தேவையா? மத்தியில் ஆட்சியில் இருப்பதால் உளவுத்துறை மூலமாக தெரிந்து கொண்டிருக்கலாம். செல்போனில் வாய்ஸ் ரெக்கார்ட்டில் பேசுவதை எடுக்க கூடிய அண்ணாமலைக்கு மீனவர் பிரச்சினை தெரியாமல் போச்சே!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது - எல்.முருகன் குற்றச்சாட்டு

எந்த வண்டி டெல்லிக்கு போகும், எந்த வண்டி டெல்லிக்கு போகாது என்று மக்கள் தான் தீர்ப்பு அளிப்பார்கள். இதனை அண்ணாமலையார் தீர்மானிக்க? மக்கள் தான் எஜமானர்கள். அண்ணாமலை என்ன ஞானியா? அரசியலுக்காக எதுவென்றாலும் அண்ணாமலை பேசலாம். எந்த வண்டி டெல்லிக்கு போகும் என்று தேர்தலின் போது மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

click me!