தமிழகத்தில் எப்போது மக்களவை தேர்தல் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
17வது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜுன் மாதம் 16ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது இதனையடுத்து, கடந்த சில மாதங்களாகவே தேர்தல் தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளை படுஜோராக ஆரம்பித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தேதி சரியாக மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய தேர்தல்,7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்குகள் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ஆம் தேதி மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் வேலூரைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் தேர்தல் நடந்த மொத்தமுள்ள 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்றது. அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.
தமிழகத்திற்கு வழக்கம் போல ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!