மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ள நிலையில் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில், பாஜக கூட்டணிக்கு நான்கு முதல் 8 இடங்கள் வரை வெற்றி கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக தேர்தல் நடக்கும் முன்பாக எந்த கட்சி வெல்லும் என்பது குறித்த கருத்து கணிப்புகள் பல நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த கருத்து கணிப்புகள் அப்படியே நடந்து விடும் என்றும் கூற முடியாது, அதே சமயம் இந்த கருத்து கணிப்புகளில் வெளியாகும் முடிவுகள் அரசியல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
அந்த வகையில் இன்னும் 8 மாத காலத்தில் நடக்கவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசு தான் வெல்லும் என்ற கருத்து கணிப்புகள் பெரிய அளவில் வெளியாகி வருகிறது. குறிப்பாக மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 295 முதல் 325 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் 26 கட்சிகளின் இந்திய கூட்டணி பெரும் பின்னாடவை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது. வெளியாகி உள்ள லோக்சபா சர்வேயின்படி மத்தியில் மீண்டும் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி அமையும் என்றும், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நான்கு முதல் 8 இடங்களை பாஜக அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் வெல்லும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழ்த்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார், இது பாஜக அரசு தமிழகத்தில் வெற்றி பெற ஒரு மாபெரும் வாய்ப்பாக அமையும் என்றும். திமுக ஆட்சியின் மீது ஏற்பட்டு வரும் சில அதிருப்திகளும் பாஜகவின் வெற்றியை உறுதியாக்கியுள்ளது என்றும் கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகிறது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய நான்கு தொகுதிகளை கண்டிப்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெல்லும் என்றும், மதுரை, சென்னை மற்றும் ராமநாதபுரம் போன்ற பகுதிகளை தங்கள் குறி வைத்துள்ளதாகவும் பாஜக அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 என்ற அளவை புதுச்சேரியுடன் இணைந்து வெல்வோம் என்று சூளுரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு எனக்கு எதிராக பாஜக சதி செய்கிறது - ஜோதிமணி