“தமிழகத்தில் “லோக் அயுக்தா” சட்டத்தை உடனடியாக அமைக்க வேண்டும்” – ஸ்டாலின் வலியுறுத்தல்

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 04:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
“தமிழகத்தில் “லோக் அயுக்தா” சட்டத்தை உடனடியாக அமைக்க வேண்டும்” – ஸ்டாலின் வலியுறுத்தல்

சுருக்கம்

இதுகுறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. தலைமையிலான அரசு இதுவரை லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை.

இதுவரை லோக்பால் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வராமல் மத்திய அரசு தாமதிக்கிறது. அதனால்தான், “அவசரச் சட்டம் கொண்டு வந்து இந்த திருத்தங்களை நிறைவேற்றி லோக்பால் அமைப்பு ஏன் உருவாக்கக் கூடாது?” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு மத்திய அரசைப் பார்த்து நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பை உருவாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையிலும் கூட வழக்கமான “வாய்தா வாங்கும்” செயலில்தான் அதிமுக அரசு தீவிரம் காட்டுகிறதே தவிர, ஊழல் ஒழிப்பில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

பொது வாழ்வில் தூய்மையை நிலைநாட்டவும், அப்பழுக்கற்ற அரசு நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்கவும் உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டனத்திற்குப் பிறகாவது “லோக்பால்” அமைப்பை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

லோக்பால் வி‌ஷயத்தில் மத்திய அரசுக்குத் தானே உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது என்று அலட்சியமாக இருக்காமல், தமிழகத்தில் “லோக் அயுக்தா” அமைப்பை உடனடியாக அ.தி.மு.க. அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட் டுக்களை பெறுவதற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் இன்றுடன் முடிவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த சலுகைகளை 31.3.2017 அன்று வரை நீட்டிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?