செம்மொழி பூங்காவில் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 04:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
செம்மொழி பூங்காவில் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

சுருக்கம்

சென்னை  செம்மொழி பூங்கா ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ளது. முன்னர் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஆக இருந்தது. செல்வந்தர்கள் வசதி படைத்தவர்கள் காரில் வந்து உணவு உண்ணும் பூங்காவாக இருந்தது. 

பல ஏக்கர் பரப்பளவு உள்ள இடம் கோடிக்கணக்கான மதிப்புள்ள இடத்தை நீதிமன்றம் போய் அரசு மீட்டது. மீட்ட இடத்தை அழகுபடுத்தி அதற்கு செம்மொழி மாநாடு நடந்த நேரம் என்பதால் செம்மொழி பூங்கா என அப்போதைய முதல்வர் பெயர் சூட்டினார்.

பெயர்தான் செம்மொழி பூங்கா சென்னையின் இரைச்சல் மிகுந்த கார்பண்டை ஆக்சைட் சூழலில் அழகாக இருக்கும் பூங்கா இப்போது காதலர்கள் கூடிக்குலாவும் இடமாக மாறி போனது. பூங்காவுக்குள் ஏராளாமான மரங்கள் பல ஆண்டுகள் பழமையானது உள்ளது.

ஆனால் அந்த மரங்களை பராமரிப்பது குறைந்து வருகிறது. இந்நிலையில் செம்மொழி பூங்காவில் உள்ள பழமையான மரம் ஒன்று வேரோடு முறிந்து விழுந்தது.

இந்த மரத்தின் அடிப்பாகம் உளுத்து போனதால் முறிந்து விழுந்தது. அதிர்ஸ்டவசமாக மரத்தின் அருகே அப்போது யாரும் இல்லாததால் உயிரிழப்போ , காயமோ  யாருக்கும் ஏற்படவில்லை.

PREV
click me!

Recommended Stories

Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?