ஜெயலலிதா பூரண நலம்பெற்றதையொட்டி நள்ளிரவில் சின்னம்மா சிறப்பு காணிக்கை பூஜை…

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 01:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
ஜெயலலிதா பூரண நலம்பெற்றதையொட்டி நள்ளிரவில் சின்னம்மா சிறப்பு காணிக்கை பூஜை…

சுருக்கம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 60 நாட்களை கடந்துவிட்டது. தொடர்ந்து அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், ஜெயல்லிதாவை‘ நேரில் காண வேண்டும். அவர் பேசுவதை நேரில் பார்க்க வேண்டும் என மிகுந்த ஆர்வத்துதோடு காத்திருக்கின்றனா.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிசியு எனப்படும் கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதனால், மகிழ்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கோயில்கள், தேவாலாயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் இருந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உற்ற தோழியான சசிகலா, சென்னை பெசன்ட் நகர் பாம்பன் சாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று, தொடர்ந்து பிரார்த்தனைகள், செய்து வந்ததாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உள்பட பல கோயில்களுக்கு சென்று வலம் வந்ததுடன், உண்ணாவிரதம் இருந்துள்ளார் சசிகலா.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதலே சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில் TN 04-AM 5 என்ற எண் கொண்ட லேன்சர் கார், TN20-CU2277 என்ற எண் கொண்ட காரும் கோயில் முன் வந்து நின்றது. அதில் இருந்து சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜெ.வின் ஆஸ்தான புரோகிதரான தேவாதி ஆகியோர் இறங்கி உள்ளே சென்றனர்.

பின்னர், இதுபற்றி விசாரித்ததில், ஜெயலலிதா குணமடைந்தால், சிறப்பு காணிக்கைகள் செலுத்துவதாக வேண்டி கொண்டதாகவும், அதற்காக நேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சார்பில் பூஜை நடந்ததாகவும் தெரியவந்தது.

PREV
click me!

Recommended Stories

குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி
ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்