அரசுப்பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி கிடையாது..அதிரடிஅறிவிப்பிற்கு காரணம் இதுதான்..பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

By Thanalakshmi VFirst Published Jun 8, 2022, 1:49 PM IST
Highlights

அரசுப்பள்ளிகளில் இனி எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி அல்லாமல், அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு மாற்றப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
 

மழலையர் வகுப்பு:

அரசு பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி எனப்படும்  மழலையர் வகுப்புகள் இனி அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர்,”பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி இனி  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் . அதன்படி, அரசுப்பள்ளிகளில் இனி எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் கிடையாது. அதற்குபதிலா அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் எடுக்கப்படும் என்றார்.

அங்கன்வாடி மையங்கள்:

எனவே அங்கன்வாடி மையம் அருகில் எங்கு உள்ளதோ, அங்கே குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதில் பணியாற்றிய ஆசிரியர் ஏற்கனவே இருந்த படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளியில் முழுமையாக பணியமர்த்தப்படுவர் என்று கூறியிருந்தார். இதனிடையே அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

அதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டுமென்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர்களால் மழலையர் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இனி அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி செயல்படும். மேலும் இனி மழலையர் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மையம் மூலமாக நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியிடங்கள்:

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் தற்காலிக அடிப்படையில் மழலையர் பள்ளிகள் பணியமர்த்த ஆசிரியர்கள், அரசுப்பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவை என்பதால் தொடக்கப்பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.2013 - 14 க்கு பின் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்காததால் ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்ததாகவும் அதே போல் தொடக்கநிலைப்பள்ளிகளில் 4,863 காலிபணியிடங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

click me!