தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசன முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (08.06.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளல் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், நீலகிரி, கோயம்பூர்த்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (09.06.2022) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10, 11, மற்றும் 12ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்நபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில், தேவாலா (நீலகிரி) -3, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), இலுப்பூர் (புதுக்கோட்டை), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்பூத்தூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கொரோனா இன்னும் முடியல.. மக்கள் உஷாரா இருக்கணும்.! எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும், வரும் 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
கேரளா-கர்நாடக கடலோர பகுதி மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக அந்த சென்னை வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக அதிகரிக்கும் காற்று மாசு! - சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா!