பரபரப்பு !! பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. எல்.கே.ஜி மாணவன் உடல் நசுங்கி பலி..

Published : Jun 27, 2022, 11:39 AM IST
பரபரப்பு !!  பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. எல்.கே.ஜி மாணவன் உடல் நசுங்கி பலி..

சுருக்கம்

நெல்லையில் பள்ளி ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கிய எல்.கே.ஜி மாணவன் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நெல்லை மாவட்டம் வெட்டியபந்தியில் வசவப்புரம் - செய்துங்கநல்லூர் சாலையில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

மேலும் படிக்க:10, 12 ல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு.. இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்..தெரிந்துக்கொள்ள வேண்டியவை?

இதில் கவிழ்ந்த ஆட்டோவிற்கு அடியில் சிக்கிய எல்.கே.ஜி மாணவன் செல்வ நவீன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். மேலும் இந்த விபத்தில் 5 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

மேலும் படிக்க:ஆன்லைன் ரம்மிக்கு தடை.?பரிந்துரை குழு அறிக்கை முதல்வரிடம் ஒப்படைப்பு.! அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:Alert : சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் ஷாக்! ஜூலை 1 முதல் அமல் !

பள்ளிக்கு 6 மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 வயது எல்.கே.ஜி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை