“சாய்பாபா கோவில் பிரசாதத்தில் கிடந்த பல்லி…!!!” – தீவிர சிகிச்சை பிரிவில் 2 குழந்தைகள்

Asianet News Tamil  
Published : Oct 31, 2016, 06:25 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
“சாய்பாபா கோவில் பிரசாதத்தில் கிடந்த பல்லி…!!!” – தீவிர சிகிச்சை பிரிவில் 2 குழந்தைகள்

சுருக்கம்

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் பல்லி விழுந்த பிரசாதத்தை சாப்பிட்ட 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர்.

அதன்படி சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த வேலன் தனது மகன் பிரவீன்குமார் மற்றும் மகள் கலையுடன் குடும்பத்தோடு சென்று  மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.  

இதைத்தொடர்ந்து கோவிலில் சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது. தயிர் சாதத்தை சாப்பிட்ட பிரவீன்குமார் மற்றும் கலை தயிர் சாதத்தில் பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பிரவீன்குமார் மற்றும் கலை சம்பவ இடத்திலேயே  வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உடனடியாக அவர்கள் இருவரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக வேலன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வேலன் அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோவில் நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்திற்கு கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது,

கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதால், சிசிடிவி காமிராக்களை ஆராய்ந்து பார்க்கும்படி வேலன் காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்த பின்னர் வாங்கி சாப்பிடும் கோவில் பிரசாதத்தில் பல்லி விழுந்துள்ள சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!