தீபாவளி முடிந்தாச்சு :தெருக்களில் குவிந்துள்ள பட்டாசுகளை அள்ளுவது யாா்?

First Published Oct 31, 2016, 3:08 AM IST
Highlights


ஆட்டம், பாட்டம், பட்டாசு என குதூகலத்துடன் தீபாவளி பண்டிகை இனிதே முடிவடைந்து விட்டது. இன்றைய ஞாயிறு விடுமுறை மட்டும் கழிந்தால் நாளை வழக்கம் போல அனைவரும் தங்களது பணியை தொடங்க ஆரம்பித்துவிடுவார்கள். சென்னையிலிருந்தும், இல்லை பிற ஊர்களில் இருந்தும் தங்களது சொந்த ஊர் சென்ற மக்கள் இன்றே கிளம்பினால் தான் நாளைய நாளில் அலுவலகத்திற்கு நேரம் தவறாமல் செல்ல முடியும்.

தீபாவளி தினம் தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஆங்காங்கே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தீபாவளி தினமாக நேற்று பட்டாசு வெடிப்பு உச்ச நிலைக்கு சென்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய பட்டாசு சத்தம் இரவு 11 மணியளவிலும் நின்றபாடில்லை.

மாலை வேளையில் ஆங்காங்கே மக்கள் வெடிக்கும் விலையுயர்ந்த பட்டாசுகளால் வானமே ஜொலிக்கத்தான் செய்தது. பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தாலும் அதனாலும் ஏற்படும் மாசுக்களை நினைத்தால் மனம் வேதனை கொள்ளாமல் இல்லை. இதனிடையே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பட்டாசு வெடித்தால் ஏற்பட்ட குப்பைகள் ஆங்காங்கே மழை நீரில் கலந்த படி உள்ளது. உங்களது தெருக்களை நீங்களே வெளியே சென்று பார்த்தால் கூட இந்த நிலைமை புரியும்.

தினந்தோறும் துப்புறவு பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு உறைகள் இல்லை என்றே சொல்லப்படுகிறது. எனவே, தீபாவளி பட்டாசு குப்பைகளை அள்ளுவதற்கு தேவையான பாதுகாப்பு உறைகள் துப்புறவு பணியாளர்களுக்கு கிடைத்திடும் வகையில் அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தீபாவளி என்பது ஆண்டுக்கு ஒருமுறை தான். மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கலாம். ஆனால் நம் வீட்டின் முன்பே நாம் வெடிக்கும் போது ஏற்படும் பட்டாசு குப்பைகளை நாமே சுத்தம் செய்வதில் தவறு ஒன்றும் வந்து விடாதே. எனவே அலுவலகம், வேலை என்றில்லாமல் முடிந்த வரை நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து மாசற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்துவோம்.

click me!