
போச்சமபள்ளி
போச்சம்பள்ளியில் காலை 6 மணிக்கே மதுபான விற்பனையைத் தொடங்கி வியாபாரம் அமோகமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்குட்பட்டது கொடமாண்டப்பட்டி. இங்கு இருக்கும் ஏரியில் காலை 6 மணி முதல் மதுபான விற்பனை தொடங்கிவிடுகிறது.
இந்த மதுபான விற்பனையை செய்பவர் திருமால். போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான மதுப்பிரியர்களுக்கு மது விநியோகம் இவரிடம் இருந்துதான் நடக்கிறது.
இவரிடம் இல்லாத சரக்கே இல்லை. யார் என்ன பிராண்டில் கேட்டாலும் உடனே கிடைக்கும் அதுவும் 6 மணிக்கே.
எப்பவும் ரெடிமேட் தான்…
அரசு நேரத்தை 10 மணியில் இருந்து 12 ஆக மாற்றியபோது, இவர் தனது நேரத்தை 6 மணிக்கே ஆரம்பித்து தன்னுடைய தொழில் பக்தியைக் காண்பித்து குடிபிரியர்களையே மெய்சிலிர்க்க வைக்கிறார்.
இதனை புகைப்படம் எடுத்தும், செய்தியாக்க சென்ற பத்தியாளர்களையும் திருமால் மிரட்டியுள்ளார்.
காலை 6 மணிக்கே, ஊருக்குப் பொதுவான ஏரியில் தனது வியாபாரத்தை தொடங்கும்போதே தெரிந்திருக்க வேண்டாமா இவருக்குப் பின்னால் யாரோ இருக்கின்றனர் என்று.
அரசு மதுபாட்டில்களை வாங்கி விற்பதால் இவரால் அரசிற்கு வருமானம் என்று சொல்வதா?
அல்லது, 6 மணிக்கே வியாபாரத்தைத் தொடங்கி அரசிற்கு நட்டம் ஏற்படுத்துகிறாரா? என்பது விடை தெரியா கேள்வியே!