TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!

By Raghupati R  |  First Published Jun 24, 2022, 5:19 PM IST

TASMAC : இந்த மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். திட்டத்தை வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


டாஸ்மாக்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

தமிழகத்தில்  தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளில் மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும் வீசப்படுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுச்சூழலும் மாசு ஏற்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க : AIADMK : புரட்சி பயணம் ஆரம்பம்.! ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா..நம்ம லிஸ்ட்லயே இல்லையே ?

உயர்நீதிமன்றம் உத்தரவு

இதை தடுக்கசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நீலகிரியில் 1காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின் மேல் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் காலி பாட்டில்களை மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மீண்டும் கொடுத்து ரூ.10ஐ திரும்பபெறும் நடைமுறை அமலில் உள்ளது.

மதுபான விலை உயர்வு

இந்த மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். திட்டத்தை வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மதுபிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : Kodanad case : மீண்டும் சூடுபிடித்த கொடநாடு வழக்கு.. சிக்கலில் இபிஎஸ்.. அடுத்து என்ன ?

click me!