Tamilnadu Rains : 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

By Raghupati RFirst Published Jan 19, 2022, 1:07 PM IST
Highlights

இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் கனமழை பெய்தது. ஜனவரி ஆரம்பத்தில் கூட மழை பெய்தது.இந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களில்  நீலகிரி, கோவை, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் அதி காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், 20 முதல் 23 தேதி  வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!