Prime Saravana Store: சென்னையில் அதிர்ச்சி.. பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை திடீரென ஜப்தி.. அதிர வைக்கும் காரணம்.!

Published : Jan 19, 2022, 11:59 AM ISTUpdated : Jan 19, 2022, 01:32 PM IST
Prime Saravana Store: சென்னையில் அதிர்ச்சி.. பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை திடீரென ஜப்தி.. அதிர வைக்கும் காரணம்.!

சுருக்கம்

கடந்த சில வாரங்களுக்கு முன் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ஐ.டி ரெய்டு நடந்த நிலையில், பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை திடீரென ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தியாகராய நகரில் பிரைம் சரவணா ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு பிரைம் சரவணா மற்றும் தங்க மாளிகை இந்தியன் வங்கியிடம் ரூ.240 கோடி பெற்ற கடன் பெற்றுள்ளது. தற்போது ரூ. 400 கோடி வங்கிக்கு செலுத்த வேண்டிய பணம் இன்னும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் இந்தியன் வங்கி எழும்பூர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் பிரைம் சரவண ஸ்டோருக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ரங்கநாதன் தெருவிலுள்ள கடை மற்றும் உஸ்மான் சாலையிலுள்ள நகைக்கடை கட்டிடத்தை அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக சீல் வைத்தனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ஐ.டி ரெய்டு நடந்த நிலையில், பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!