இது நல்லாயிருக்கே… கல்லூரி பேராசிரியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு… எவ்வளவு தெரியுமா..?

By manimegalai aFirst Published Oct 1, 2021, 6:47 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் தற்காலிக கல்லூரி பேராசிரியர்களின் சம்பளத்தை உயர்த்தி உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னை: தமிழகம் முழுவதும் தற்காலிக கல்லூரி பேராசிரியர்களின் சம்பளத்தை உயர்த்தி உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடந்த 2020 - 2021ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் 1661 தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது. அவர்களுக்கு மாதம் 15000 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.

இந் நிலையில் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக கல்லூரி பேராசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டு உள்ளார்.

அவர் தமது அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளதாவது: 2021 – 2022ம் ஆண்டில் 59 அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் 1661 தற்காலி பேராசிரியர்களை பணியில் அமர்த்தி கொள்ளலாம்.

அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.20,000 என 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் அளிக்கப்படும். மார்ச் மாதம் 2022ம் ஆண்டு வரை அவர்களை பணியமர்த்தி கொள்ளலாம். இதற்காக ரூ.36.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளார். தமிழக அரசின் இந்த உத்தரவு தற்காலிக கலை மற்றும் அறிவியல் பேராசிரியர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

click me!