கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு….!

By manimegalai aFirst Published Sep 30, 2021, 9:49 PM IST
Highlights

கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து, 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வாரம் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து, 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வாரம் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்துவரும் நிலையில் ஊரடங்கு விதிகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஏற்கெனவே கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து பிற மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்ற்று வருகின்றன. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கும் நேரடி வகுப்புகளை நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலமாண்டு மாணவர்க்ளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாக கல்லூரிகள் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 4-ம் தேதி முதல் மாணவ, மாணவிகள் நேரடி வகுப்புகளில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

அதில், ''2021- 2022ஆம்‌ கல்வியாண்டின்‌ பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு 04.10.2021 முதல்‌ கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள்‌ தொடங்கிட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணாக்கர்களுக்கு புத்தொளிப்‌ பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்கள்‌ உரிய ஏற்பாடுகள்‌ செய்ய வேண்டும்‌. தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ தனியார் சுயநிதி கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளுக்கு இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்குமாறு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

தகுதியுள்ள அனைத்து மாணாக்கர்களும்‌ தடுப்பூசி செலுத்திக்‌கொள்ள அறிவுறுத்துமாறும்‌ கல்லூரி வளாகங்களில்‌ முகக் கவசம்‌ கட்டாயம்‌ அளிய வேண்டும்‌ என்றும்‌ சமூக இடைவெளியைத் தவறாது பின்பற்ற வேண்டும்‌ என்பதையும்‌ உறுதிப்படுத்துமாறு கல்லூரி முதல்வர்களைக் கேட்டுக்‌ கொள்கிறேன் இவ்வாறு கல்லூரிக்‌ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

click me!