அடி தூள்…. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,650 கோடியை வாரி வழங்கும் ஆசிய வங்கி…!

Published : Sep 30, 2021, 09:15 PM IST
அடி தூள்…. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,650 கோடியை வாரி வழங்கும் ஆசிய வங்கி…!

சுருக்கம்

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 2016ம் ஆண்டு முதல் ஏ.ஐ.ஐ.பி. வங்கி நிதியுதவி அளித்து வருகிறது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 2016ம் ஆண்டு முதல் ஏ.ஐ.ஐ.பி. வங்கி நிதியுதவி அளித்து வருகிறது.

சென்னை மெட்ரோ திட்டப்பணிகளுக்கு ரூ. 2,650 கோடி கடன் வழங்க ஆசிய உள்கட்டமைப்பு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் முதலீட்டு செயல்பாடுகளுக்கான துணைத்தலைவா் டி.ஜே.பாண்டியன் சென்னை வந்திருந்தார். அப்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் அதன் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.ஆய்விற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு  ரூ.2,650 கோடி கடன் வழங்க ஆசிய உள்கட்டமைப்பு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை போக்குவரத்து மெட்ரோவின் உயர்தர உள்கட்டமைப்பை மேம்படுத்தவே கடன் வழங்கப்படுவதாக ஏஐஐபி வங்கி துணைத் தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 2016ம் ஆண்டு முதல் ஏஐஐபி வங்கி நிதியுதவி அளித்து வருகிறது. அந்த வகையில் ஏ.ஐ.ஐ.பி. வங்கி இதுவரை 28 திட்டங்களுக்கு இந்தியாவில் கடன் வழங்கி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!