இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பேரறிவாளன் மனு…. அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்.!

By manimegalai aFirst Published Sep 30, 2021, 6:58 PM IST
Highlights

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

கருணை மனு மீதான நடவடிக்கை குறித்து பேரறிவாளன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆளுநருக்கு கருணை மனு அனுப்பியுள்ளதா குறிப்பிட்டுள்ளார். கருணை மனு மீதான் அனிலை என்ன? தன்னை விடுதலை செய்ய அமைச்சரவை செய்த பரிந்துரையின் மீது ஆளுநர் முடிவெடுக்க தடையாக இருப்பது எது? உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வழக்கு விவரங்களை தர வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலக தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்ததாக பேரறிவாளன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் வராத நிலையில் அதே கேள்விகளை மத்திய தகவல் ஆணையத்திற்கு மனுவாக அளித்ததாகவும், அந்த மனு மாநில தகவல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஆகவே, தனது மனுவுக்கு பதிலளிக்கும்படி மாநில தகவல் ஆணையத்துக்கு  உத்தரவிட வேண்டும் என்று பேரறிவாளன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

click me!