
சேலம்
சேலத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் நேற்று நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
"தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்,
கள்ளக்குறிச்சி வழக்குரைஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,
வழக்குரைஞர் தொழில் செய்வதற்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைப்பெற்றது.
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1, 2 ஆகிய நீதிமன்றப் பணிகளில் கலந்து கொள்ளாமல் பார் அசோசியேஷன், அட்வகேட்ஸ் அசோசியேஷன், லா அசோசியேஷன் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் புறக்கணித்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக வழக்குரைஞர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.