விவசாயிகள் மீது தடியடி - ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றதால் சரமாரி தாக்குதல்

 
Published : Apr 07, 2017, 04:29 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
விவசாயிகள் மீது தடியடி - ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றதால் சரமாரி தாக்குதல்

சுருக்கம்

latthi charge on tamilnadu farmers

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் என பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து  கடந்த மாதம் 14-ந்தேதி முதல் நாட்டின் தலைநகரமான டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த 24 நாட்களாக மரத்தில் ஏறி போராட்டம், பாம்பு கறி, எலிக்கறி உண்ணும் போராட்டம் என தினமும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  25- வது இன்று நடந்த போராட்டத்தில் விவசாயிகள். இந்நிலையில், விவசாயிகள் அனைவரும் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றதால் போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 15 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!