சுகாதார திட்ட ஒதுக்கீடுகளில் வரலாறு காணாத முறைகேடு : வருமான வரி துறை அதிரடி சோதனையின் நிஜ பின்னணி!

 
Published : Apr 07, 2017, 02:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
சுகாதார திட்ட ஒதுக்கீடுகளில் வரலாறு காணாத முறைகேடு : வருமான வரி துறை அதிரடி சோதனையின் நிஜ பின்னணி!

சுருக்கம்

a detailed report about income tax raid in tamilnadu

மத்திய அரசு, சுகாதார திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முறைகேடுகள், நடந்துள்ளதன் காரணமாகவே, வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதற்கு இதுவே காரணமாகும்.

மாநிலங்களில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்காக, மத்திய அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்படும். அந்த வகையில், மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில்  முறைகேடுகள் நடந்துள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது.

அதன் காரணமாகவே, சுகாதாரத்துறை அமைச்சர் வீடு, அலுவலகங்கள், கல்வி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், நீண்ட காலமாக சுகாதார துறை செயலாளராக இருந்து வரும் ராதாகிருஷ்ணன், இயக்குனர் குழந்தை சாமி, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கும் இதில்  தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், அவர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரன் தண்ணீராய் வாரி இறைக்கும் பெரும்பாலான பணம், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாகவே விநியோகிக்கப்பட்டு வருவதாக வருமான வரி துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும், பன்னீர் அணியில் இருந்து நடிகர் சரத்குமாரை,  50 லட்ச ரூபாய் கொடுத்து தினகரன் அணிக்கு அழைத்து வந்தவரும் விஜயபாஸ்கர் என்று  அதிகாரிகளுக்கு சிலர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பணத்தை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல், தேவையான போது எடுத்துக் கொள்ளும் வகையில், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சில எம்.எல்.ஏ க்களிடமும் பணத்தை கொடுத்து வைத்துள்ளார் விஜயபாஸ்கர்.

இந்த அனைத்து தகவலையும் உறுதி செய்து கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று அதிரடியாக நுழைந்து 35 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் பல சிக்கி உள்ளதாகவும், விரைவில் இதை சி.பி.ஐ மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அந்த விசாரணையின் போது, ஜெயலலிதா மரணம் குறித்த சில மர்மங்களும், விஜயபாஸ்கரிடம்  இருந்து வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து, ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பிய போது, அதற்கு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தவர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.  

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!