மருத்துவ பல்கலைகழகத்தில் முறைகேடு - துணை வேந்தர் கீதா லட்சுமி வீட்டில் ரெய்டு

 
Published : Apr 07, 2017, 11:17 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
மருத்துவ பல்கலைகழகத்தில் முறைகேடு - துணை வேந்தர் கீதா லட்சுமி வீட்டில் ரெய்டு

சுருக்கம்

income tax raid in geetha lakshmi house

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாக அதிகரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் செல்கிறது. இதனால், பல இடங்களில் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்களை கைப்பற்றினர். சிலரை கைது செய்துள்ளனர்.

இதைதொடர்ந்து, தேர்தலுக்கு 4 நாட்களே உள்ளதால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.

இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் 30க்கு மேற்பட்ட இடங்களில் நடத்தப்படும் அதிரடி சோதனையில் பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி துணை வேந்தர் கீதா லட்சுமி வீட்டிலும், பல்கலைக்கழக அலுவலகத்திலும் ரெட்டு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, துறை ரீதியிலான முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வந்தது. அதன்பேரில் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டில் சோதனை நடத்துவதாகவும், பணம் பட்டுவாடா செய்ததற்காக இல்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த சோதனையை மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் துணையுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

PREV
click me!

Recommended Stories

சனிக்கிழமை அதுவுமா.. தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை!
தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!