மகனின் திருமணத்திற்கு வரும் லாலு! 5 நாள் கிடைத்தது பரோலு!

 
Published : May 09, 2018, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
மகனின் திருமணத்திற்கு வரும் லாலு! 5 நாள் கிடைத்தது பரோலு!

சுருக்கம்

lalu prasad granded 5 day parol to attand sons marriage

ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 பரோல் கிடைத்தது.

வரும் 12-ந் தேதி லாலுவின் மூத்த மகன் தேஜஸ்வி பிரசாத் திருமணம் நடைபெற உள்ளது. மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள லாலு பரோல் கேட்டிருந்தார்.

இதை தொடர்ந்து ராஞ்சி நீதிமன்றத்தில் இன்று அவருக்கு 5 நாள்  வழங்கப்பட்டது. பீகாரில்   பாட்னா நகரில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு, உடல்நிலை பாதிப்பு காரணமாக ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பரோல் கிடைத்ததை தொடர்ந்து இன்று மாலை விமானம் மூலம் பாட்னா சென்றடைவார் என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முதன்முறையாக வெளிப்படையாக பார்ப்பனர்களை தூக்கி பிடிக்கும் அரசியல் தலைவர்..! சீமானுக்கு விசுவாசமாக இருப்பார்களா பிராமணர்கள்?
காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?