
தம்பி மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டி புதரில் வீசியதாக விவசாயி போலீசாரிடம் கூறியுள்ள தகவல், பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடா மங்களம் அருகே உள்ள, மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் எஸ்தர் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் 2 வயதில் சர்வன் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது.
கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால், தன்னுடைய குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார் எஸ்தர். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி முதல் எஸ்தரை காணவில்லை என கூறப்படுகிறது.
இந்த தகவல் தெரியவர, எஸ்தரின் குடும்பத்தினர், மேலாளவந்தசேரிக்கு சென்று ஜோசப் ராஜசேகரின் உறவினர்கள் மற்றும் அண்ணன் நெல்சநிடன் விசாரித்துள்ளனர்.
அப்போது நெல்சல் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் உடனடியாக வெளிநாட்டில் இருந்த எஸ்தரின் கணவர், ஜோசப் ராஜசேகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் உடனடியாக ஜோசப் ஊருக்கு திரும்பினார்.
மேலும் தன்னுடைய மனைவியை காணவில்லை என தேவான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஜோசப்.
இந்த புகாரின் பேரில் அனைவரிடமும், போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டனர். அப்போது, ஜோசப் ராஜசேகரனின் அண்ணன், நெல்சனிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
இது குறித்து அவர் கூறுகையில்... சொத்து பிரச்சனை காரணமாக எஸ்தரை கொலை செய்ததை நெல்சல் ஒப்புக்கொண்டார்.
மேலும் எஸ்தரை கொலை செய்து யாரும் கண்டு பிடித்து விட கூடாது என, துண்டு துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி கார்ச்சாங்குடி, ஆற்றங்கரையில் உள்ள நாணல் புதரில் வீசியதாக பரபரப்பு தகவலை தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அவரை பொலிசார் அங்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து இரண்டு சாக்கு மூட்டைகள் கிடந்தன. இதனை போலீசார் அவிழ்த்து சோதனை செய்தபோது அதில் எஸ்தரின் உடல் ததுண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. உடனடியாக எஸ்தரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்சனை கைது செய்து தொடந்து இந்த சம்பவம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.