உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து தொழிலதிபரிடம் பணம் பறிப்பு - கள்ளக்காதலி காதலனுடன் கைது

 
Published : Jun 02, 2017, 03:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து தொழிலதிபரிடம் பணம் பறிப்பு - கள்ளக்காதலி காதலனுடன் கைது

சுருக்கம்

lady threaten a businessman with a scandal video

தொழிலதிபர் தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி பணம் பறித்த கள்ளக்காதலியை அவரது காதலனுடன் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 சொகுசு கார்கள் மற்றும் 100 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

மாதவரம் மூலக்கடையை சேர்ந்தவர் விஜயராஜ். இவர் அதேபகுதியில் டயர் டிரேடிங் கடை ஒன்று நடத்தி வருகிறார்.

இவரது கடையில், பெரவள்ளூர் ராஜா கார்டனை சேர்ந்த சுகன்யா என்ற பெண் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

விஜயராஜும் சுகன்யாவும் உல்லாசமாக இருக்கும் அளவிற்கு நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இதனை பயன்படுத்தி முன்னாள் ஊழியரும் சுகன்யா காதலனுமான பிரவீன் குமார் உதவியுடன் தொழிலதிபர் விஜயராஜ் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் போது சுகன்யா வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ காட்சியை தொழிலதிபரிடம் காட்டி சுகன்யா மற்றும் அவரது காதலன் பிரவீன்குமார் முதற்கட்டமாக50 லட்சம் ரூபாய்  பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து மீண்டும் அந்த வீடியோவை காட்டி  ஐம்பது லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலதிபர் விஜயராஜ் மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் குமாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சுகன்யா மற்றும் பிரவீன் குமாரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 சொகுசு கார்கள் மற்றும் 100 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!